பருத்தி:
காய் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். அதிகம் சேதம் உள்ள பயிர்களில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி 800 மில்லி அல்லது பாசலோன் 35 இ.சி 600 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
பருத்தி செடியில் சாறு உறிஞ்சும் தத்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் ஒட்டும் பொறி வைத்து பூச்சிகளைக் கண்காணிக்கவும். தேவைப்பட்டால் இமிடோகுளோபிரிட் 200 எஸ்.எல் ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில் தெளிக்கவும்.
கரும்பு:
தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோகிரமா (1 சிசி) ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தவும். இதனை 6 முறை 15 நாள்கள் இடைவெளியில் பயன்படுத்தவும்.
நிலக்கடலை
இலைச் சுருட்டுப் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை விளக்குப்பொறி வைத்து கண்காணிக்கவும். மாலத்தியான் 50 இ.சி. 500 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
சிவப்பு கம்பளிப் புழுவானது மின்சார வசதி உள்ள இடங்களில் விளக்குப் பொறியை மாலை 7 முதல் 10 மணி வரை எரிய விட்டு, வெண்ணிற அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். பயிரில் இலையின் அடியில் முத்துப்போன்று குவியலாக இருக்கும் முட்டைக் குவியல்களையும், கண்ணாடி போன்று சுரண்டப்பட்ட இலைகளில் கூட்டமாகக் காணப்படும் இளம் புழுக்களையும், இலையோடு கிள்ளி எடுத்து அழிக்கலாம்.