** காடி ஆடு இனம் சிறிய உடலமைப்பைக் கொண்டது
** ஜம்மு மாநிலத்தின் கிஸ்த்துவார், படார்வா பகுதிகளில் காணப்படுகிறது
** குளிர்காலத்தில் இமாசலப்பிரதேசத்தின் குலுவாலி பகுதிகளிலும், கோடைக்காலத்தில் பிர்பாஞ்சல் மலைப்பகுதிகளிலும் படார் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது
** கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை
** பொதுவாக ரோமம் வெண்மை நிறத்திலும், முகத்தில் பழுப்பு நிற முடியும் காணப்படும்.
** மென்மை ரோமம் ஒரு ஆட்டிலிருந்து ஆண்டொன்றிற்கு மூன்று முறை வெட்டப்பட்டு 1.13 கி.கி வரை பெறப்படுகின்றது
** தரம் உயர்ந்த குலு போர்வைகளும் கம்பளங்களும் தயாரிக்கப்படுகின்றன