இந்திய வெள்ளாட்டு இனமான சமுனாபாரி பற்றிய தகவல்கள் இதோ…

 
Published : Oct 23, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
இந்திய வெள்ளாட்டு இனமான சமுனாபாரி பற்றிய தகவல்கள் இதோ…

சுருக்கம்

details of jamunapari

 

** சமுனாபாரி இன ஆடுகள் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்தது.

** உடல் வெண்மை நிறத்திலும், கருமை நிறப் புள்ளிகள் கழுத்திலும் காதுகளிலும் காணப்படும்.

** இந்த இன ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பையும், இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களையும் கொண்டது.

** ரோமானிய மூக்கும் அதன் மேலுள்ள முடிக்கற்றையும் இதற்கு கிளியின் வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

** கொம்புகள் குட்டையாகவும், தட்டையாகவும் பின்னோக்கி முறுக்கியும் காணப்படும்.

** தொடைப் பகுதியில் நீண்ட முடிக்கற்றைகள் காணப்படும். நீண்ட தொங்கும் காதுகளைக் கொண்டது.

** வளர்ந்த கிடா 90-100 செ.மீ உயரமும் 65-80 கி.கி எடையுடனும், பெட்டை 70-80 செ.மீ உயரமும் 45-60 கி.கி எடையுடனும் இருக்கும்.

** பொதுவாக பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டி ஈனும், பிறந்த குட்டியின் எடை 4 கி.கி இருக்கும்.

** ஒரு நாளைக்கு 2-2.5 கி.கி பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன்பெற்றது.

** ஆண்டு ஒன்றிற்கு 274 நாட்களில் 280 கி.கி பால் உற்பத்தி செய்யும். பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 3.5 சதவிகிதம் இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!