வெண்டைக்காய், நமது உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் காய்களில் இன்றியமையாத ஒன்று.
வெண்டை ஒரு குறுகிய கால காய்கறி பயிர். செடி வயலில் நட்ட 40 வது நாள் அறுவடை செய்யலாம்.
undefined
வெண்டையில் தனியார் ரக விதைகள் அதிகம் கிடைக்கின்றன . தற்போதைய புதிய வரவான கோவை வேளாண் கல்லூரி வெளியிட்டுள்ள CO-4 ரகம் சிறந்தது. இந்த ரகம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
அடி உரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட வேண்டும். பார் க்கு பார் ஒன்றரை அடி மற்றும் செடிக்கு செடி ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
உயிர் உரங்கள் தலா ஒரு லிட்டர், அதாவது அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, potash பாக்டிரியா, zinc பாக்டீரியா, V A M 5kg powder + ஒரு kg வெள்ளம் 100 kg தொழு உரத்தில் கலந்து மூன்று நாள் ஈரச்சாக்கு போர்த்திவைத்து பின்பு, விதை விதைத்து நீர் பாய்ச்சிய மூன்றாம் நாள் இட வேண்டும். வேப்பம் பிண்ணாக்கு ஏக்கருக்கு 100 kg இட வேண்டும்.
வெண்டைக்கு கற்பூரகரைசல் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சி தாக்குதலில் இருந்து முற்றிலும் பாதுகாக்கலாம்.
வெண்டை செடிக்கு வாரம் ஒரு முறை ஜீவாம்ருதம் + பழ கரைசல் தொழு உரத்தில் கலந்து ஈரம் இருக்கும் போது இட வேண்டும். வேப்பெண்ணெய் + கோமியம் + கத்தாழைச் சாறு கலந்து வாரம் ஒரு முறை கட்டாயம் தெளிக்க வேண்டும். பழகரைசல் செடிகளின் மேல் தெளிக்கலாம்.
வெண்டை செடி பூக்கள் வைக்க ஆரம்பிக்கும் பொழுது தேங்காய் பால் கரைசல் வாரம் ஒரு முறை தெளிக்கவேண்டும். இதனை தொடர்ந்து கொடுப்பதன் மூலம் நீண்ட கவர்ச்சியான காய்களை பெறலாம்.
வெண்டையை அதிகம் தாக்கும் ஈக்களை, மஞ்சள் வண்ணம் பூசிய அட்டைகளில் கிரீஸ் தடவி வைப்பதன் மூலம் பச்சை மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும்பொழுது அதிக நாட்கள் வெண்டை செடி காய்கள் காய்க்கும். மகசூலும் அதிகம் கொடுக்கும். முக்கியமாக வெண்டைக்காயின் சுவை நன்றாக இருக்கும்.