அவரை சாகுபடி
நமது அன்றாட உணவில் முக்கிய பங்கு வகிக்கும் காய்களில் ஒன்று. பழங்காலத்தில் இருந்து மனிதன் விரும்பி உண்னும் காய்கறிகளில் அவரையும் ஒன்று.
அவரையில் குட்டை, நீளம் என 2 வகைகள் உண்டு. நீளம் மற்றும் குட்டை நமது பாரம்பரிய ரகங்கள் ஆகும்.
இது பணப்பயிராக தோட்டங்களிலும், வீட்டு உபயோகத்திற்காக வீட்டு கூரைகளிலும், பந்தல்களிலும் பயிரிடப்படுகிறது. மாடி தோட்ட முறையில் நிறைய வீடுகளில் பயிரிடப்படுகிறது.
வீடுகளில் பொதுவாக கொடி அவரை பந்தல் அல்லது சில குற்று மரங்கள் மீது ஏற்றப்பட்டு அதில் இருந்து காய்கள் பறிக்க படுகின்றன.
அவரை விதைப்பதற்கு ஆடிப்பட்டம் சிறந்தது ஆகும். ஆடி பட்டதில் விதைத்தால் கார்த்திகை மாதம் முதல் பூக்கள் பூக்க தொடங்கும்.
ஒரு குழியில் நான்கு விதைகள் வீதம் நடவு செய்யலாம். கோடி அவரை நன்கு படர்ந்து பூக்கள் போது காய் காய்க்கும். அதனால் வீடுகளிலும், மாடிகளிலும் வளர்க்கும் பொழுது நல்ல அகலமான பந்தல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சிறந்தது.
அவரைக்காய் தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை காய்க்கும். வீட்டு தேவைக்கு தினமும் காய் பறிக்கலாம்.
இதன் பூக்கள் ஊதா மற்றும் வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் இருக்கும். காய்கள் சில நீளமாகவும் சில குட்டையாகவும் இருக்கும். இரண்டு ரகங்கள் இதில் உண்டு விதை வாங்கும்பொழுது ரகத்தை கேட்டு தெரிந்து வாங்கவும்.
அவரையை அதிகம் தாக்கும் நோய்கள். அசுவினி, இலை சுருட்டு புழு இந்த இரண்டு நோய்களும் கொடி அவரையை தாக்கும் நோய்கள். கற்பூரகரைசல் தெளித்தால் அவரையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தேங்காய் பால் மோர் கரைசல் பூக்கள் வந்த பிறகு தெளிப்பதால் பூக்கள் உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.
வேரில் இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலம் அதிக நாள் காய்கள் காய்க்கும். மேலும் சுவையான காய்கள் கிடைக்கும்.