விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற கூற்றுப்படி நாம் உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமாகவும் வீரியமுடனும், பூச்சி, நோய் தாக்குதல் இன்றி பேண வேண்டும்.
இதற்கு திறந்த வெளி நாற்று உற்பத்தியை அகலப்பாத்தி அல்லது மேட்டுப்பாத்தி மூலம் விதைத்தவாறு அவ்வாறு நிச்சயம் உற்பத்தி செய்யாது தவிர்த்தல் அவசியம்.
பலவகை செலவுகளைக் குறைத்து வேர் வளர்க்க நன்கு வளர்ந்த நாற்றுக்கள் மூலம் தான் உயர் மகசூல் கிடைக்கும். எத்தனை திட்டமிட்டு விதைகளை ஊன்றினாலும் நிச்சயம் விதைகள் முளைத்திட ஏற்ற சூழலை இதன் மூலம் ஏற்படுத்த வாய்ப்பு குறைவே.
undefined
அதாவது ஒரு இடத்தில் 10 விதைகள் விழவும் வாய்ப்புள்ளது. அவை முளைத்து போட்டியா ஆயுள் முடிந்தும் அவஸ்தை நேரும். தனியாக விழுந்த விதைகள் மண்ணில் உள்ள நுண்கிருமிகள் வேர்ப்புழுக்கள், வண்டுகள் மூலம் பாதிக்கப்படுவதுடன் அதிகநீர் தேக்கம், அதிக வெயில் தாக்கம் மற்றும் வேகமாக வீசும் காற்றால் பாதிப்பு என வேறு பல காரணங்களாலும் நமக்கு தரமான நாற்றுக்கள் உரிய தருணத்தில் ஒரே சீராக சம உயரமாக நல்ல தண்டுப்பகுதி, அதிக சல்லி வேர்கள் நோய் தாக்காத இலைகள் கொண்டதாக கிடைக்காது.
நிழல்வலைகள் சூரியஒளியின் சூட்டை குறைத்து மட்டுப்படுத்திடும். தரமான நாற்றுக்கள் பெற 50 சதவீத நிழல் தரும் தன்மைக் கொண்ட பச்சை நிற வலைகள் சமவெளிப்பகுதிகளில் உதவுபவை. மலைப்பிரதேசங்களில் 30 சதம் நிழல் தரும் கறுப்பு நிற நிழல்வலை உபயோகிக்க வேண்டும்.
குழித்தட்டுகள் 0.2, 0.4 0.6 0.8 மற்றும் 1.0 மி.மீ. தடிமன் கொண்டதாக உள்ளன. 1.0 முதல் 1.5 இன்ச் வரை குழிகள் கொண்டதாக உள்ளன. பொதுவாக காய்கறிப் பயிர்களுக்கு 0.8 மி.மீ தடிமன் கொண்டு 98 குழிகள் கொண்ட குழித்தட்டுகள் உதவும் பாங்கில் உள்ளன.
அதிக நீர் வழிந்து செல்ல ஏதுவாக இரண்டு துவாரங்கள் கொண்ட குழித்தட்டு எடையோ குறைவு. மிகவும் எளிதில் ப வடிவில் மடித்து மடக்கு வாகனங்களில் அடுக்கி எடுத்துச் செல்லலாம். நன்கு பதப்படுத்திய தென்னை நார்க்கழிவினை வளர் ஊடகமாகப் பயன்படுத்தலாம்