கொட்டகையைச் சுத்தம் செய்தல்:
கால்நடைப் பண்ணை தினசரி சுத்தம் செய்வது பல நுண்ணுயிரிகள் மூலம் பரவும் தொற்று நோயைத் தடுக்க உதவும். சுகாதாரமான பராமரிப்பிற்கு தினசரி நல்ல தண்ணீர் விட்டு கொட்டகையைக் கழுவுதல், சாணியை சுத்தப்படுத்துதல் முறையான வடிகால் வசதி அமைத்தல் போன்றவை அவசியம். இது வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றிலிருந்து காக்க உதவும்.
பால்பண்ணையின் சுகாதாரம்
பால் கறக்கும் இடம் எப்போதும் சுத்தமாக இருத்தல் அவசியம். இல்லையெனில் பசுக்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு அவதியுறும். மேலும் பாதிக்கப்பட்ட பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் நீண்ட நேரம் பயன்படுத்த உதவாது. அதை அருந்தும் மனிதர்களும் பாதிக்கப்படலாம். எனவே ஈக்கள், கொசு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாத்து வைத்தல் அவசியம். இல்லாவிடில் பேபஸியோஸிஸ், தெய்லிரோஸிஸ் போன்ற நோய்கள் ஏற்படும்.
சுகாதார ஊக்கிகள் / தொற்று நீக்குகள்
சூரிய ஒளி ஒரு சிறந்த தொற்று நீக்கி. தொற்று நீக்குதல் என்பது நோய் பரப்பும் கிருமிகளை அழித்தலே ஆகும். பிளீச்சிங் பவுடர், வாஷிங் சோடா, (washing soda), அயோடின் மற்றும் அயோடோப்பர், சோடியம் கார்பனேட், கால்சியம் ஹைட்ராக்சைடு, கால்சியம் ஆக்சைடு மற்றும் பீனால் போன்றவை தொற்று நீக்கிகளாகச் செயல் படுகின்றன.
பிளீச்சிங் பவுடர்
இது கால்சியம் ஹைபோ குளோரை: எனவும் அழைக்கப்படுகிறது. இதில் 39% சிறந்த தொற்று நீக்கியான குளோரின் உள்ளது.
அயோடின் மற்றும் அயோடோப்பர்
இதில் வினையூக்கியான அயோடின் 1-2% உள்ளது. சோடியம் கார்பனேட்: சலவை சோடா இதன் 4% சூடான கலவை சோடாக் கரைசலானது வைரஸ் மற்றும் ஒரு சில பாக்டீரியாக்களை அழிக்க வல்லது
கால்சியம் கலவைகள்
இந்த கால்சியம் கலவைகள் கொண்டு கழுவும் பொழுது தரை, சுவர் மற்றும் நீர்த்தொட்டிகளை பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கலாம்.
பீனால்
பீனால் (அ) கார்பாலிக் அமிலம் பூச்சைக் கொல்லியாக செயல்படுகிறது.
பூச்சிக்கொல்லிகள்:
தொழுவங்களில் உணி பேண் போன்ற ஒட்டுண்ணிப் பூச்சிகள் கால்நடைகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்தும். இவை மண், தொட்டிகள் மற்றும் சுவர்கள் மூலமாகவும் எல்லா இடங்களுக்கும் பரவும். இவற்றைக் கட்டுப் படுத்த சிறிது பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
நீர்ம நிலையில் உள்ள பூச்சிக்கொல்லிகளை கைவிசைத் தெளிப்பான் மூலமோ பஞ்சு அல்லது எஏதேனும் ஃபிரஷ் பயன்படுத்தலாம். இப் பூச்சி மருந்துகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை. ஆதலால் தண்ணீர் தீவனங்களில் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.