சித்திரை உழவு, பத்தரை மாற்று தங்கம்…

 |  First Published Nov 26, 2016, 3:11 PM IST



ஏப்ரல், மே மாதங்களில் 15 சதவீத கோடை மழை கிடைக்கிறது. மழை பெய்யும் போது நிலத்தின் சரிவிற்கு குறுக்காக 25க்கு 30 செ.மீ., உழவு செய்யும் போது மழைநீர் வழிந்தோடாமல் நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது.

இதனால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு வளமான மேல் மண் பாதுகாக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பில் மழைநீர் சேமிக்கப்படுகிறது.
போதுமான காற்றோட்டம் கிடைப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மண்ணில் உள்ள ரசாயன உரம், பூச்சிமருந்துகள் சிதைக்கப்படுகிறது.

Latest Videos

undefined

அடுத்த பயிர் சாகுபடிக்கு ஊட்டச்சத்துகள் கிடைப்பது எளிதாகிறது. கோடை உழவால் புழு, பூச்சிகள், கிருமிகள் மற்றும் களைசெடிகளும் அழிக்கப்படுகிறது.

 

click me!