மிளகாய் தோட்டத்தில் பழம் அழுகல் நோயை பூஞ்சாளக் கொல்லிகள் தெளித்து கட்டுப்படுத்திட வேண்டும்.
காய்கள், ஹிலியாத்திஸ் புரடீனியா புழுக்களால் தாக்கப்பட்டால் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.
undefined
பொட்டாஷ் உரமிடுவதால் காய்களின் நிறமும், காரத்தன்மையும் அதிகரிக்கிறது.
மிளகாய் செடியில் பழங்கள் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியவுடன் பழங்களைப் பறிக்கலாம். மிளகாய்ப் பழங்களை காம்புடன் பறிக்க வேண்டும்.
பழங்களைப் பறித்த அன்றே காயப் போட வேண்டும்.
மணல் பரப்பிய கலங்களில் பழங்களைப் பரப்பி உலர விட வேண்டும்.
மிதமான வெப்பநிலை உள்ள காலையிலும், மாலையிலும் 4 நாட்கள் உலர விட வேண்டும்.
நன்கு உலர்த்திய மிளகாய் வற்றலில் இருந்து காய்ப் புழு தாக்கிய மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கிய, நிறம் மாறிய சண்டு வற்றல் மேலும் உடைந்த மிளகாய் வற்றலை நீக்கி நல்ல வற்றலைப் பிரித்து எடுக்க வேண்டும்.
அறையின் ஈரம் மிளகாய் பழங்களைத் தாக்காமல் இருக்க தரையின் மேல் மணல் பரப்பி அதன் மேல் சேமிக்க வேண்டும்.
இரவில் மிளகாய்ப் பழங்கள் பனியால் பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மீது லேசான படுதா போட்டு மூடி வைக்கலாம்.
நல்ல நிறத்துடன் நீர் தெளிக்கப்படாமலும் காரல் வாடை இல்லாத வற்றல் மிளகாய் நல்ல குணத்துடன் நீண்டநாள் கெடாமலும் இருக்கும்.