தேங்காய் மண்டி புரோக்கர் கமிஷன் கையைக் கடிக்கிறதா? இந்த யுத்தியை செய்து பாருங்கள்…

 
Published : Mar 02, 2017, 01:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
தேங்காய் மண்டி புரோக்கர் கமிஷன் கையைக் கடிக்கிறதா? இந்த யுத்தியை செய்து பாருங்கள்…

சுருக்கம்

Broker commissions coconut Mandi katikkirata hand? Try this strategy ...

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தென்னை மரம் வளர்க்கப்படுகிறது. எனினும் ‘உழுதவனுக்கு உழக்கு கூட மிஞ்சாது’ என கூறுவர். இதை மெய்ப்பிக்கும் வகையில் தான் தென்னை விவசாயமும் உள்ளது.

பருப்பு பிடித்த தேங்காய்களை மரத்தில் இருந்து வெட்டி எடுக்க மரம் ஒன்றுக்கு தனி கூலி. தேங்காய் மட்டை உரிக்க காய் ஒன்றுக்கு தனி கூலி. மட்டை உரித்த காய்களை தரம் பிரிக்க தனி கூலி. தேங்காய் கமிஷன் புரோக்கர் காய்களை தரம் பிரிக்கும்போது கழிவுக்காய் என ஆயிரம் காய்களில் 100 முதல் 150 காய்களை கழிப்பார். அதை கையோடு எடுத்து கொள்வார்.

கழிவு காய்களுக்கு புரோக்கர் நிர்ணயிக்கும் விலையே இறுதி. தவிர ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி தனி. தென்னையை வளர்த்து, ஆளாக்கி, உருவாக்கி, காய்களை பறித்து, மட்டை உரித்து, விற்பனை செய்து, காசாக்குவதற்குள் விவசாயி படும்பாடு சொல்லி மாளாது.

என்னிடம் நெட்டை ரகத்தில் 600 மரங்கள் உள்ளன. காய்ப்பு மரம் 500 உள்ளன. 45 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பருக்கும் என்று தனது விவசாய அனுபவத்தை ஆரம்பிக்கிறார் ராஜன்.

தேங்காய் மண்டி புரோக்கர் நிர்ணயிக்கும் விலை சீசனுக்கு ஏற்ப 1000 காய்கள் ரூ.3500. இதில் 100 காய்கள் கழிவாக கணக்கிடுவார். அதற்கு மிக குறைந்த விலை நிர்ணயிப்பார். இதை தவிர்க்க தேங்காய் பறிப்பு, மட்டை உரிப்பு, தரம் பிரிப்பு என அனைத்து பணிகளையும் ஆட்களை வைத்து செய்கிறேன்.

காய்களை தரம் பிரித்து தேங்காய் மண்டிக்கு நேரடியாக அனுப்புகிறேன். இதனால் புரோக்கர் கமிஷன், கழிவு காய்கள் வீண் என்ற பேச்சுக்கே இடமில்லை.

வீணாகும் தேங்காய் மட்டைகளை தேங்காய் நார் தயாரிக்கும் மில்லிற்கு விற்கிறேன். இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

தண்ணீர் வசதி இருப்பதால் தென்னை விவசாயத்தை லாபகரமாக செய்கிறேன். கழிவுக்காய்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் உள்ளது. லாபத்தில் தென்னை தோட்டங்களை வாங்கி வருகிறேன்” என்கிறார்.

 

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!