1.. கால்சியம் / பாஸ்பரஸ்
எலும்பு வளர்ச்சி அடையும்
பால்சுரம், ரிக்கட்ஸ் எலும்புருக்கி நோய், சினைப்பிரச்னை போன்றவை தீரும்.
2. சோடியம் குளோரைடு
உடல்வளர்ச்சி, இனப்பெருக்கம் பெருகும்.
பசியின்மை, வளர்ச்சி குன்றல், வலிப்பு நோய் போன்றவை தீரும்.
3. மெக்னீசியம்
செரிமானம், நரம்பு மண்டல செயல்பாடுகள் அதிகரிக்கும்
வலிப்பு நோய் தீரும்.
4. கந்தகம்
உறுப்பு வேலைகள் நுண்ணுயிர் செரிமானம் அதிகரிக்கும்.
எடை குறைதல், அதிக உமிழ்நீர், கண்ணீர் சுரப்பு போன்ற பிரச்சனைகள் தீரும்.
5. இரும்பு
நோய் எதிர்ப்புத்திறன், ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சுவாசக் கோளாறுகள், ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் தீரும்.
6. தாமிரம்
நரம்பு மண்டல செயல்பாடுகள் அதிகரிக்கும்.
கழிச்சல், பசியின்மை, ரத்தசோகை போன்ற பிரச்சனைகள் தீரும்.
7. மாங்கனீசு
இனப்பெருக்கம் அதிகரிக்கும்.
குறையுடன் கன்றுகள் இருந்தால் அந்த பிரச்சனைகள் தீரும்.
8. கோபால்ட்
வைட்டமின் "பி12' உற்பத்தி அதிகரிக்கும்.
ரத்தசோகை, இனவிருத்தி உறுப்பு வளர்ச்சி குறைவு, கழிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
9. செலினியம்
சினைப்பிடிப்பு அதிகரிக்கும்.
கருச்சிதைவு பிரச்சனைகள் தீரும்.
10. அயோடின்
தைராய்டு சுரப்பிகள் பெருகும்.
வளர்ச்சி குறைந்த கன்று பிறப்பதை தவிர்க்கப்படும்.