அ. நோயற்ற மஞ்சள் கிழங்குகளை விதைக்காக தெரிவு செய்ய வேண்டும்.
ஆ. களை நீக்கம், மண் அணைத்தல், மூடாக்கு போன்றவை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டும்.
இ. தண்ணீர் தேங்காமல் இருக்க வடிகால் ஏற்படுத்த வேண்டும்.
ஈ. கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 0.3 சதம் டைத்தேன் எம்.45 பூஞ்சாணத்தை செடியைச் சுற்றி ஊற்றி நனைக்க வேண்டும்.
உ. இலைப்புள்ளி நோய் தாக்குதல் தென்பட்டால் போர்டோ கலவை 1 சதம் அல்லது டைத்தேன் எம்.45 0.2 சதம் (200 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) கரைசலை தெளிக்க வேண்டும்.