1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார் என்ற கதை உண்டு.
4. கோபூசை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூசை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாள்களில் பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூசைக்குப் பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூசை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.