Asianet News TamilAsianet News Tamil

மம்தா எனும் வேகத்தடையை தூக்கி ஏறியுங்கள்... பிரதமர் மோடி ஆவேசம்...!

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடை போல் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

Mamata speed breaker...pm modi
Author
Kolkata, First Published Apr 3, 2019, 6:08 PM IST

மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் வேகத்தடை போல் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார் என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 17, 24, 30 மற்றும் மே 7, 12 தேதிகளில் 5  கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். சிலிகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தார். Mamata speed breaker...pm modi

மேலும நமது ராணுவம் பலவீனப்படுத்தி அவர்களின் கை, கால்களை கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தான் அனுதாபிகளாக மாறியுள்ளன. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு உள்பட மத்திய அரசின் எந்த திட்டங்களின் பலன்களும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய மக்களை வந்தடைய முடியாதவாறு உங்கள் முதல்வர் மம்தா பானர்ஜி முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளார். Mamata speed breaker...pm modi

மேற்குவங்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கராக மம்தா இருந்து வருகிறார். இந்த ஸ்பீட் பிரேக்கர் எப்போது அகற்றப்படும், அங்கு வளர்ச்சியின் வேகத்தை அதிகப்படுத்தலாம் என காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios