Asianet News TamilAsianet News Tamil

Samuthirakani: இயக்குனர் ஷங்கருடன் 'கேம் சேஞ்சர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி!

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியின் பிறந்தநாள் 'கேம் சேஞ்சர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரமாண்டமாக நடந்த நிலையில், இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில், ஒரு துணை இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக மாறியவர் சமுத்திரக்கனி. சமீப காலமாக திரைப்படங்கள் இயக்குவதை விட, படு பிஸியான நடிகராகி வலம் வருகிறார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட சமுத்திரக்கனி இன்று தன்னுடைய 51-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும்... 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பில் உள்ள இவருக்கு, படக்குழுவினர் கேக் வெட்டி பிறந்தநாளை செல்லபிரேட் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories