Prakash Raj : காஸ்ட்லி வில்லன் பிரகாஷ் ராஜ் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? அவரின் Net Worth இதோ
கோலிவுட்டில் காஸ்ட்லி வில்லனாக வலம் வரும் பிரகாஷ் ராஜ் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
Prakash Raj
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவர் தான் பிரகாஷ் ராஜ். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், கலாஷேத்ரா என்கிற நாடக கம்பேனியில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது இவருக்கு வெறும் ரூ.300 தான் சம்பளம். பின்னர் இவருக்கு இயக்குனர் பால சந்தரிடம் அறிமுகம் கிடைத்தது. அவர் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த டூயட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் பிரகாஷ் ராஜ்.
Prakash Raj Birthday
தனக்கு வாழ்க்கை கொடுத்த படம் அது என்பதால் அதன் தலைப்பை தான் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் டூயட் மூவீஸ் என சூட்டி இருந்தார் பிரகாஷ் ராஜ். இவர் இதுவரை நான்கு முறை தேசிய விருது வாங்கி இருக்கிறார். முதன்முதலில் பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது பெற்று தந்த படம் இருவர். மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற அவர், பின்னர் பிரியதர்ஷன் இயக்கிய காஞ்சிவரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கினார்.
Prakash Raj salary
இதுதவிர கன்னடத்தில் இவர் தயாரித்த புட்டகானா ஹைவேஸ் என்கிற படத்திற்காக சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. அதேபோல் தெலுங்கு படத்திற்காகவும் ஒரு தேசிய விருது வாங்கி உள்ளார். இவர் நடிகராக மட்டுமின்றி தொகுப்பாளராகவும் களமிறங்கி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கினார்.
இதையும் படியுங்கள்... Ajith : லவ் டுடே முதல் ஜீன்ஸ் வரை... என்னது இதெல்லாம் அஜித் நடிக்கவேண்டிய படமா? நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய AK
Prakash Raj First Wife Lalitha kumari
நடிகர் பிரகாஷ் ராஜ் என்றாலே அனைவருக்கும் நியாபகத்துக்கு வருவது அவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் தான். ஆசை தொடங்கி கில்லி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஐயா, அந்நியன், சிவகாசி, போக்கிரி என இவர் வில்லனாக மிரட்டிய படங்களின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும் அந்த அளவுக்கு மக்களின் மனம் கவர்ந்த வில்லனாக உருவெடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
Prakash Raj second Wife Pony Verma
இவருக்கு கடந்த 1994-ம் ஆண்டே திருமணம் ஆனது. நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருந்தன. இதில் 5 வயதிலேயே பிரகாஷ் ராஜின் மகன் மரணமடைந்தார். மகனின் மறைவை தொடர்ந்து மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2009-ம் ஆண்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்து பிரிந்தார் பிரகாஷ் ராஜ். பின்னர் அடுத்த ஆண்டே போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜுக்கு வேதந்த் என்கிற மகனும் உள்ளார்.
Prakash Raj Net Worth
நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். அதன்படி நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ரூ.50 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர் ஒருபடத்துக்கு ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இதுதவிர தயாரிப்பு நிறுவனம் மூலமும் சம்பாதித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.
இதையும் படியுங்கள்... Game Changer: ராம்சரண் பிறந்தநாள் பரிசாக கேம் சேஞ்சர் படத்தின் பிரம்மாண்ட அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்