Summer Hair Care Tips : கோடையில் உங்கள் கூந்தல் வளர இந்த டிப்ஸ் அப் பாலோ பண்ணுங்க!!
கோடை காலத்தில் உங்கள் கூந்த வளர வேண்டுமென்றால், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை உடனே பின்பற்றுங்கள்..
கோடை காலத்தில் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் வருவது பொதுவானது. அதுபோல, இந்த சீசனில் முடி தொடர்பான பிரச்சனைகளும் வரும் என்று கேள்விப்படுகிறோம். அதுவும் குறிப்பாக, பெண்கள் இந்த பிரச்சினையை அதிகமாகவே சந்திக்கிறார்கள். இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, பெண்கள் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பிரச்சினை ஓய்வதில்லை.
அத்தகைய சூழ்நிலையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். எனவே, இந்த பதிவில் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்: கோடை காலத்தில் முடியை பராமரிக்க, வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துங்கள். இதனால், முடி வறட்சி மற்றும் உதிர்தல் பிரச்னை குறையும். அதுமட்டுமின்றி, முடி பட்டுப் போல் மாறும் மற்றும் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் முட்டை அல்லது தயிரில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: Summer Hair Care Tips : கோடையில் அதிகமாக முடி கொட்டுதா..? உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ!
எண்ணெய் மசாஜ்: கோடை காலத்தில் முடிக்கு ஊட்டமளிப்பது மிகவும் அவசியம். எனவே, வாரத்திற்கு 2 நாட்கள் எண்ணெயைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்த பிறகு, ஷாம்பூ போடுங்கள். மேலும் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: Parenting Tips : கொளுத்தும் கோடை வெயில்.. குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ!!
கோடையில் தலை முடியை இப்படி பராமரியுங்கள்:
தலை முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.
முடியை நன்றாக சீப்புங்கள்.
ஹேர் ஸ்ப்ரே குறைவாக பயன்படுத்தவும்
தொப்பி கொண்டு முடியை மூட மறக்காதீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D