Famous TV Actors: ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Ormax தகவல்!
பிப்ரவரி மாதத்தில் தமிழ் சீரியலில் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்ட டாப் 5 சீரியல் பிரபலங்கள் பற்றிய தகவலை Ormax தற்போது வெளியிட்டுள்ளது.
Ormax நிறுவனம் ஒவ்வொரு மாதமும், சினிமா மற்றும் சீரியல் பிரபலங்கள் பற்றிய தகவல்களை கருத்து கணிப்பு அடிப்படியில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகமான ரசிகர்களால் விரும்பப்படும் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரிவித்துள்ளது.
இந்த லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளவர், 'கயல்' சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி தான். தெலுங்கு சீரியல் நடிகையான இவர், தமிழில் 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில்... நடிகை பிரியா பவானி ஷங்கர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் அவர் விலகிய பின்னர் நடித்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று தந்ததோடு, அதிகம் விரும்பப்படும் நடிகையாகவும் மாற்றியுள்ளது.
Ormax வெளியிட்ட இந்த லிஸ்டில், இரண்டாவது இடத்தில் உள்ளவர்... 'பாக்யலட்சுமி' சீரியல் நடிகை சுசித்ரா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில்... எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், சீரியலில் இறங்கினார். திருமணம் ஆகி, குழந்தைகள் பெற்று கொண்ட பின்னரும்... பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற ஆழமான கருத்தை 'பாக்கிய லட்சுமி' சீரியல் வலியுறுத்தி வருகிறது. இந்த தொடர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் சுசித்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது 'சிறகடிக்க ஆசை' சீரியலில் தன்னுடைய அம்மா விஜயா என்ன சொன்னாலும் அதற்க்கு மாஸான கவுன்ட்டர் கொடுத்து வரும் முத்து தான். இவரின் எதார்த்தமான நடிப்பும், நக்கலான பேச்சுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே பல ரசிகர்களால் விரும்பப்படும் பிரபலமாக, வெற்றி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அடுத்த இடத்தில் உள்ளார்... 'சுந்தரி' சீரியலில் கலெக்டராக நடித்து வரும் கேபிரியல்லா செலஸ். இவர் பல திரைப்படங்களில் சப்போர்ட்ங் ரோலில் நடித்துள்ள நிலையில், டிக் டாக் மூலமாக மிகவும் பிரபலமானவர். இவரும் அதிகப்படியான ரசிகர்களால் விரும்பப்படும் பிரபலமாக உள்ளார்.
இந்த லிஸ்டில், 5-ஆவது இடத்தில் உள்ளார்... 'சிங்கப்பெண்ணே' சீரியல் நாயகி ஆனந்தி. இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் மனீஷா மகேஷ், தத்ரூபமாக ஒரு கிராமத்து பெண்ணின் கதாபாத்திரத்தை பிரதிபலித்து வருகிறார். இவர் தமிழில் அறிமுகமாகியுள்ள முதல் சீரியலிலேயே அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .