பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 14,15,16ஆம் தேதிகளில் கொண்டாடப்படும். உழவர் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது
Image credits: Getty
இயற்கைக்கு நன்றி
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் திருவிழாவானது 3 நாட்கள் தொடர் விழாவாக கொண்டாடப்படும்.
Image credits: our own
பொங்கல் பரிசு
தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. 1000 ரூபாய், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட தொகுப்புகள் அடங்கும்
Image credits: our own
2025ஆம் ஆண்டு பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி, 1.77 கோடி சேலைகள் வழங்கப்படவுள்ளது. வேட்டி, சேலைகள் தரமாகவும், பல்வேறு ரகங்களில் வழங்கப்பட உள்ளது.
Image credits: our own
பொங்கல் தொகுப்பு
டிசம்பர் 31-ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும். இதனை தொடர்ந்து நியாய விலைகடைகளுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்படவுள்ளது.
Image credits: our own
வேட்டி, சேலை வழங்கும் பணி
வேட்டி, சேலை வழங்கும் பணி ஜனவரி 10-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.