மது அருந்துவது கல்லீரலில் கொழுப்பு படியும். இது கல்லீரல் தொடர்புடைய நோய்களை உண்டாக்கும். பின்னர் கல்லீரல் புற்று நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.
Image credits: our own
குடலில் புண்
மது வயிற்றுக்குள் செல்லும் போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்பட்டு குடலில் புண் ஏற்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, வாயு, வயிறு வீக்கம் ஏற்படும்.
Image credits: our own
நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தன்மை குறைவதால் தொற்று நோய்கள் வந்தால் எளிதில் தீராது.
Image credits: our own
இதயத்தை பாதிக்கும்
மது அருந்துவதால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் இரத்த நாளங்களில் உள்ள தசைகளை பாதிக்கும். இது இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Image credits: our own
தசை நார் இழப்பு
வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கிறது. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.
Image credits: our own
மூளையை பாதிக்கும்
அதிகபடியான மது அருந்துவது, மூளையில் உள்ள இரசாயனங்களை மந்தமாக்குகிறது. மூளை பாதிப்பு நோய் ஏற்பட வழி வகுக்கிறது.