tamilnadu
அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4,777 கடைகள் செயல்படுகின்றன.
அரசு இயந்திரமே டாஸ்மாக் நிறுவனத்தில் வரும் வருமானத்தில் தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது.
2024-25ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.1,734.54 கோடி அதிகரித்து ரூ.45,885.67 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.60 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகின்றன. இதில், 85 லட்சம் பெட்டிகள் பீர் வகைகளாகும்.
இந்நிலையில் கோடைக்காலத்தில் மதுபிரியர்களை குஷிப்படுத்த 6 புதிய பீர் வகைகள் அறிமுகம்
தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் விற்கப்படும் பிளாக் பஸ்டர் பீர் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கர்நாடகாவில் தயாரிக்கப்பட்ட பிளாக் போர்ட், உட்பெக்கர் லார்ஜர் ஆகிய பீர் வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளது. உட்பெக்கர் என்பது பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.
அதுபோன்று, லெகர் பிளையிங் மங்கி லெகர், ஹண்டர் சூப்பர் ஸ்டிராங் ஆகிய பீர் வகைகளும் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பீர் வகைகளின் விலை ரூ.182 (650ml strong beer) முதல் ரூ.250 (650ml lager wheat beer) வரை இருக்கும். தற்போதுள்ள பீர் பிராண்டுகளின் விலை ரூ.140 முதல் ரூ.210 வரை விற்கப்படுகிறது.