tamilnadu
தமிழகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. நாள் தோறும் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது
டாஸ்மாக் கடைகளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் விடுமுறை இல்லை, அதே நேரம் ஒரு வருடத்தில் 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னையில் அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும்
FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூட வேண்டும்
FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படனும்
மகாவீர் ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- ஆட்சியர்