tamilnadu
தீபாவளி பண்டிகையென்றாலே பட்டாசு தான். கடந்த ஆண்டு மட்டும் 5ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை செய்யப்பட்டது
இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் புதிய தொழில் நுட்பத்தில் 400 வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
ஆண்டுதோறும் புதிய யுக்திகளை கையாண்டு சிறுவர், சிறுமியர், இளைஞர்களை கவரும் வண்ணம் வித்தியாசமான பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்
வானில் வர்ணஜாலங்கள் நிகழ்த்தும் வகையில், 15 ஷாட் முதல் 240 ஷாட் வரை வெடிக்கும் பட்டாசுகள் 400 முதல் 4500 ரூபாய் வரை விற்பனையாகின்றன.
மயில் தோகை போல விரிந்து வெடிக்கும் புதிய வானவெடியில் 30 முறை வானில் மயில் தோகை போல விரிந்து வெடிக்கும்.
சுழலும் கம்பி மத்தாப்புகள், சக்கரம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து வெடி சந்தைக்கு வந்துள்ளது.
இரவு மற்றும் பகல் நேர பட்டாசு விலையானது இந்தாண்டு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய பட்டாசு தற்போது 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.