தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியுள்ளது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் தண்ணீரில் மூழ்கியது
Image credits: Our own
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்த சுற்று மழையால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டதை மழை புரட்டிப்போட்டுள்ளது.
Image credits: social media
மீண்டும் புயல் சின்னம்
டிசம்பர் மாதத்தில் தமிழகத்தை குறிவைத்து புயல் சின்னங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது. தற்போது மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது
Image credits: social media
இந்திய வானிலை மையம் அலர்ட்
வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
Image credits: Social media
எந்த மாவட்டத்தில் மழை
வட மேற்கு திசையில் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும். டிசம்பர் 17 முதல் டிசம்பர் 20ஆம் தேதி தமிழகத்தில் 5ம் சுற்று பருவ மழை தீவிரமடையும் - வானிலை ஆய்வாளர்
Image credits: Social media
புயலாக மாற வாய்ப்பா.?
டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் வட கடலோரம், டெல்டா மாவட்டங்களில் மழை தீவிரம் அடையும். பரவலாக கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். -வானிலை ஆய்வாளர்