sports
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் அதிகப்பட்ச தனிநபர் ரன்களை அடித்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.
நியூசிலாந்து முன்னாள் வீரர் நாதன் ஆஸ்டில் 2004ல் அமெரிக்காவுக்கு எதிராக 145 ரன்கள் எடுத்தது சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்டி ஃப்ளவர் 2002 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிராக 145 ரன்கள் எடுத்து நாதன் ஆஸ்டில் சாதனையை சமன் செய்தார்.
'கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கர் 1998ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 141 ரன்கள் எடுத்ததே சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி 2000ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 141 ரன்கள் எடுத்து சச்சினின் சாதனையை சமன் செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 2006ல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் குவித்தார்.
இலங்கை முன்னாள் வீரர் அவிஷ்க குணவர்தன 2000ம் ஆன்டு சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 132 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.