ஐபிஎல்லில் அசத்தல்! இந்திய அணியில் 'சீட்' போடும் 5 வீரர்கள்!
Tamil
ஐபிஎல் 2025
ஐபிஎல் 18வது சீசன் இளைஞர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இந்த சீசனில் இதுவரை இளம் வீரர்கள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Tamil
5 இளம் ஸ்டார் வீரர்கள்
ஐபிஎல் தொடரில் 5 இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அவர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
Tamil
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
Tamil
பிரியான்ஷ் ஆர்யா
பஞ்சாப் அணிக்காக விளையாடும் பிரியான்ஷ் ஆர்யா சிஎஸ்கேவுக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து நல்ல தொடக்கம் கொடுத்து வருகிறார்.
Tamil
திக்வேஷ் சிங்
சுனில் நரைன் போல் பந்துவீசும் லக்னோ ஸ்பின் பவுலர் திக்வேஷ் சிங் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தனது மாயாஜால பந்துவீச்சு மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
Tamil
விப்ராஜ் நிஹம்
டெல்லி கேபிடல்ஸின் விப்ராஜ் நிஹம், நடப்பு ஐபிஎல் சீசனில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்குகிறார். 104 ரன்கள் அடித்த அவர், 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
Tamil
ஆயுஷ் மாத்ரே
சிஎஸ்கே இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 3 போட்டிகளில் 69 ரன்கள் அடித்துள்ளார். டிரேட் மார்க் கிரிக்கெட் ஷாட்களை விளையாடும் இவர் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் ஜொலிக்க அதிக வாய்ப்புள்ளது.