அயர்லாந்துக்கு எதிரான ஓடிஐயில் ஸ்மிருதி மந்தனா கேப்டனாக உள்ளார். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இன்று 2வது போட்டியில் மந்தனா அரைசதம் அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரன்கள்
ஸ்மிருதி மந்தனா 95 ஓடிஐ போட்டியில் விளையாடி 4,000 ரன்களும், 145 டி20யில் 3,761 ரன்களும், 7 டெஸ்ட் போட்டிகளில் 629 ரன்களும் எடுத்துள்ளார்.
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகு
மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை விளாசும் ஸ்மிருதி மந்தனா, ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் தன்னுடைய அழகால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.
வருமானத்திலும் மகாராணி
ரன்களை குவிப்பதில் மட்டுமல்ல; வருமானம் ஈட்டுவதிலும் ஸ்மிருதி மந்தனா கில்லாடி, அவரிடம் ரூ.33 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வருமான ஆதாரம் என்ன?
ஸ்மிருதி மந்தனாவின் வருமான ஆதாரம் கிரிக்கெட் மற்றும் பெரிய பிராண்டுகளுக்கான விளம்பர ஒப்பந்தங்கள் வாயிலாக வருகிறது.
முன்னணி பிராண்ட்களின் விளம்பரம்
ஹீரோ மோட்டோகார்ப், ஹூண்டாய், கார்னியர், ரெட் புல், மாஸ்டர்கார்டு, ஸ்பெக்ட்ராக்காம் உள்ளிட்ட முன்னணி பிராண்ட்களுக்கு மந்தனா விளம்பரம் செய்கிறார்.
ஒரு விளம்பரத்துக்கு எவ்வளவு?
ஸ்மிருதி மந்தனா ஒரு விளம்பர ஒப்பந்தத்திற்கு 40 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை பெறுவதாக மணி கண்ட்ரோல் அறிக்கை கூறுகிறது.