spiritual

இந்தியாவின் டாப் 9 பணக்கார கோயில்கள்

திருமலை திருப்பதி கோயில்

இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துஅதிக அளவில் நன்கொடை வழங்குகின்றன.

பத்மநாபசுவாமி கோயில்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் உலகின் பணக்கார கோயில்களில் ஒன்றாகும். கோயிலில் புதையல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிகவும் பிரபலமானது.

ஷிர்டி சாய்பாபா

மகாராஷ்டிரா மாநிலம் மும்மையில் அமைந்துள்ளது ஷிர்டி சாய்பாபா கோயில். இக்கோயில் பணக்கார கோயில்களில் ஒன்றாகும்.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகள் இங்கு வருகின்றன.

சித்தி விநாயகர் கோயில்

மகாராஷ்டிரா மாநிலம் மும்மையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயில். மிகவும் பணக்கார கோயில்களில் ஒன்றாகும். தீபிகா படுகோன் இங்கு அடிக்கடி வருவார்.

 

பொற்கோயில்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது பொற்கோயில். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். இங்கு தினமும் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

வைஷ்ணோ தேவி கோயில்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதான தெய்வம் மாதா ராணி, வைஷ்ணவி போன்ற பெயர்களால் வழிபடப்படுகிறார்.

சோம்நாத் கோயில்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது சோம்நாத் கோயில்.  இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது. இதுவும் பணக்கார கோயில்களில் ஒன்று. 

மீனாட்சி அம்மன் கோயில்

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது. 

ஜெகந்நாதர் கோயில்

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது ஜகன்னாதர் கோயில். இந்து மதத்தில் விஷ்ணுவின் வடிவமான ஜகன்னாத கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலாகும். இதன் ரத யாத்திரைக்கு உலகப் புகழ்பெற்றது.

தெற்கு முதல் வடக்கு வரை.. நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய 7 கோவில்கள்!

இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்கள்

நாளை நாக பஞ்சமி.. பாம்புக்கு பால் கொடுக்கலாமா?

நாக பஞ்சமி அன்று பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?