spiritual

நாக பஞ்சமி அன்று பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

எப்போது நாக பஞ்சமி 2024?

நாக பஞ்சமி ஆகஸ்ட் 9,2024 வெள்ளிக்கிழமை. இந்நாளில் கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்...

தலையில் பாம்பு இருந்தால்...

கனவில் ஒருவருக்கு தலையில் பாம்பு அமர்ந்திருப்பது போல் தெரிந்தால், முன்னோர்களின் அருள் அவர் மீது இருப்பதாக அர்த்தம். அந்த நபர் தினமும் நவநாக ஸ்தோத்திரத்தை பாராயம் செய்ய வேண்டும்.

புதையலைக் காக்கும் பாம்பு...

கனவில் யாராவது ஒருவர் புதையலைக் காக்கும் பாம்பைப் பார்த்தால், அவருக்கு விரைவில் பண வரவு கிடைக்கும் என்று அர்த்தம். இதுபோன்ற கனவுகள் நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

நாகம்-நாகினி ஜோடி...

கனவில் நாகம்-நாகினி ஜோடி கை, கால்களில் சுற்றிக் கொண்டிருப்பது போல் தெரிந்தால், அது கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறி. இந்த தோஷம் உங்களை மோசமாகப் பாதித்துள்ளது என்பதே இதன் பொருள்.

பாம்பு கடித்தால்...

கனவில் யாரையாவது பாம்பு கடித்தால், விரைவில் அவர்களுக்கு ஏதாவது விபத்து நடக்கும் என்று அர்த்தம். இந்த நிலையில் அவர் தினமும் சிவலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

பறக்கும் பாம்பு...

கனவில் பறக்கும் பாம்பு வருவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. இந்த கனவின் அர்த்தம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரப்போகிறது, வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

கனவில் கருப்பு பாம்பு...

கனவில் திரும்பத் திரும்ப கருப்பு பாம்பு வந்தால் கவனமாக இருங்கள். ஏனெனில், இது ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறி. இந்த தோஷத்தில் இருந்து விடுபட காலசர்ப்ப தோஷ பூஜை செய்யுங்கள்.

மகா சிவராத்திரி 2024: இன்று உபவாசத்தை எப்போது முறிப்பது?

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2024 : அதிஷ்டம் யாருக்கு?

அட்சய திருதியை அன்று லட்சுமி தேவி, விஷ்ணுவுக்கு இந்த பிரசாதம் கொடுங்க

Zodiac Signs : காதலில் எளிதில் விழும் 6 ராசிக்காரர்கள்..!!