பொதுவாக நாம் கோயிலுக்குப் போனால், சாமி கும்பிட்டு, பூஜை செய்த பிறகு, கோயில் பிரகாரத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து தியானம் செய்வோம்.
இன்னும் சிலர், கோயில் படிகளில் அமர்ந்து தியானம் செய்வதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஆனால், கோயில் படிகளில் சிறிது நேரம் அமர்ந்தால் மன அமைதி மட்டுமல்ல, அதோடு பல நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கோயிலின் சிகரங்கள், கடவுள் சிலையின் முகங்களாகக் கருதப்படுகின்றன. அதனால்தான் கோயில் சிகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
அதேபோல, கோயில் படிகள் கடவுளின் திருவடிகளாகக் (சரண பாதுகையாக) கருதப்படுகின்றன. அதனால், அந்த இடம் மிகவும் புனிதமான இடமாகச் சொல்லப்படுகிறது.
கோயில் படிகளில் அமர்ந்து இஷ்ட தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டால், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடவுளின் அருள் பார்வை உங்கள் மீது இருக்கும்.
கோயில் படிகளில் அமர்ந்து ஒரு மந்திரத்தைச் சொல்ல வேண்டும். 'அனாயாஸேன மரணம் வினாதைன்யேன ஜீவனம் | தேஹாந்தே தவ ஸான்னித்யம் தேஹி மே பரமேஸ்வரம் ||' இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்.
இதன் பொருள்: 'வலியில்லாத மரணம், யாசகம் இல்லாத வாழ்க்கை, இறைவனின் சந்நிதியில் மரணம்' ஆகியவை எனக்கு கிடைக்க வேண்டும் பரமேஸ்வரா என்பதாகும்.