life-style

உலகின் மிகச்சிறிய பசு: புங்கனூர் பசுவின் பால், நெய் விலை என்ன?

புங்கனூர் பசு

ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் கால்நடை கண்காட்சியில், உலகின் மிகச்சிறிய பசு இனமான புங்கனூர் பசு முக்கிய ஈர்ப்பாக இருந்தது.

பால், நெய்யின் நன்மைகள்

புங்கனூர் பசு குட்டையாக இருப்பது, பால், நெய்யுடன் கூடிய பல ஆரோக்கிய நன்மைகளுக்குப் பெயர் பெற்றது. புங்கனூர் பசுவுக்கு மத முக்கியத்துவமும் உண்டு.

உலகின் மிகச்சிறிய பசு

புங்கனூர் பசுவின் உயரம் வெறும் 17 முதல் 24 அங்குலம். இது உலகின் மிகக் சிறிய பசு. இதன் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். 

நெய் கிலோ ₹50,000

புங்கனூர் ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் பால் தருகின்றன. பால் லிட்டருக்கு ரூ.1000, நெய் கிலோ ரூ50,000க்கு விற்கப்படுகிறது.

புங்கனூர் பசு என்ன சாப்பிடுகிறது?

இந்த பசுக்கள் சிறியவை என்பதால் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம், இவற்றின் உணவும் எளிமையானது. இவற்றுக்குத் தீவனம், தவிடு, பிண்ணாக்கு, புல் ஆகியவற்றைத் தருகிறார்கள்.

கைகளில் சுமந்து செல்லலாம்

இந்த பசுக்கள் குட்டையாக இருப்பதால் இவற்றுக்குக் குறைந்த இடம் தேவை, இவற்றைக் கைகளில் பிடித்துக் கூட சுமந்து செல்லலாம் என்று வளர்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

பிரதமர் மோடியிடம் புங்கனூர் பசு

புங்கனூர் பசுக்களின் விலை ரூ. 2 லட்சம் - ரூ. 10 லட்சம் வரை இருக்கும். பிரதமர் மோடியும் புங்கனூர் பசுவை வளர்க்கிறார்.

தொந்தரவு இல்லாமல் குளிக்காலத்தில் தூங்க 6 டிப்ஸ்!

வீட்டிலேயே ஈசியாக 3 வகை வெங்காய செடி வளர்க்கலாம்.! எப்படி தெரியுமா.?

இந்த உணவுகளை சாப்பிட்டால் இதய நோய் வராதாம்! என்னென்ன தெரியுமா?

வாஷிங் மெஷினில் துவைக்கக்கூடாத 9 ஆடைகள் இதுதான்!