உடல் எடை குறைக்க இரவில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்!
உடல் எடையைக் குறைப்பது என்பது பலருக்கும் ஒரு சவாலான விஷயம். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், இந்த பயணத்தை சுலபமாக்கலாம்.
life-style Sep 09 2026
Author: Raghupati R Image Credits:Getty
Tamil
தயிர்
தயிரில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, இரவு நேரத்தில் ஏற்படும் திடீர் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
Image credits: Getty
Tamil
வேகவைத்த முட்டை
முட்டையில் புரோட்டின் நிறைந்துள்ளது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும். வேகவைத்த முட்டை சிறந்த தேர்வு.
Image credits: Getty
Tamil
ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்து மிக அதிகம். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. ஓட்ஸ் கஞ்சி ஒரு நல்ல இரவு உணவு.
Image credits: Getty
Tamil
காய்கறி சூப்
காய்கறி சூப் எளிதில் ஜீரணமாகும். உடலுக்குத் தேவையான புரோட்டீனை வழங்கி, வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். இது ஒரு லைட் ஆன டின்னர்.
Image credits: Getty
Tamil
ஆப்பிள்
இரவு நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால், ஆப்பிள் ஒரு சிறந்த தேர்வு. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், பசியைக் கட்டுக்குள் வைக்கும்.
Image credits: Getty
Tamil
பாதாம்
சில பாதாம் பருப்புகளை சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரோட்டின் கிடைக்கும். ஆனால், அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Image credits: Getty
Tamil
வெள்ளரி
வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு, ஆனால் நீர்ச்சத்து அதிகம். இரவு நேரத்தில் பசியைப் போக்க இது ஒரு அருமையான, ஆரோக்கியமான வழி.