Tamil

மணிகரன், இமாச்சல பிரதேசம்

1829 மீ உயரத்தில் உள்ள மணிகரன், வெப்ப நீரூற்றுகளுக்குப் பிரபலமானது. இங்குள்ள தண்ணீரில் அதிக அளவு யுரேனியம் மற்றும் கந்தகத்தைத் தவிர கதிரியக்க தாதுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Tamil

வஜ்ரேஸ்வரி, மகாராஷ்டிரா

மந்தாகினி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வஜ்ரேஸ்வரி கிராமத்தில் பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளின் வெப்பநிலை 43 முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும். 

Image credits: google
Tamil

பக்ரேஷ்வர், மேற்கு வங்காளம்

பக்ரேஷ்வர் ஒரு புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமாகும். இது 10 வெப்ப நீரூற்றுகளைக் கொண்டுள்ளது. இதில் இயற்கையாகவே சிகிச்சைத் தாதுக்கள் நிறைந்துள்ளன.

Image credits: Google
Tamil

தப்தா பானி, ஒரிசா

பெர்ஹாம்பூரிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் தப்தபானி வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது. இந்த இயற்கை நீரூற்றில் உள்ள நீர் தோல் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளது.

Image credits: Google
Tamil

திங்பு மற்றும் சாச்சு, அருணாச்சல பிரதேசம்

தவாங் மாவட்டத்தில் உள்ள தவாங் - ஜாங் சாலையில் திங்பு மற்றும் சாச்சு வெப்ப நீருற்றுகள் உள்ளது. இங்குள்ள கந்தகம் நிறைந்த நீர் தோல் நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Image credits: Pixabay
Tamil

யுமேசம்டாங், சிக்கிம்

அழகிய வடக்கு சிக்கிமில், சீன எல்லைக்கு அருகில் உள்ள யுமேசம்டாங் பகுதியில் 14 கந்தக வெப்ப நீரூற்றுகள் உள்ளது.  

Image credits: social media
Tamil

கௌரிகுண்ட், உத்தராஞ்சல்

கௌரிகுண்ட் 1982 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு புனித நீராடல் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Image credits: social media
Tamil

பனாமிக், லடாக்

லடாக்கில் உள்ள பனாமிக் சியாச்சின் பனிப்பாறையின் தொடக்கத்தில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நீர் பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாக நம்பப்படுகிறது.

Image credits: social media

சாணக்கிய நீதி- வெற்றி அடைய தனியாக செய்ய வேண்டிய 4 விஷயங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள்!

குழந்தைகள் மன அழுத்தத்தில் இருப்பதற்கான 6 அறிகுறிகள்!

சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் 10 ட்ரிங்க்ஸ்!