Tamil

சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் 10 ட்ரிங்க்ஸ்!

Tamil

கேரட், பீட்ரூட் ஜூஸ்

இவை இரண்டிலும் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து போன்ற நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குடல் இயக்கத்தை மேம்படுத்தும், சுருக்கங்களை போக்கி சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய் ஜூஸ்

இந்த ஜூஸ் சருமத்தை உள்ளே இருந்து நச்சு நீக்குகிறது. மேலும் வீக்கத்தைக் குறைகிறது. சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து சருமத்தை பளபளப்பாக வைக்கும்.

Image credits: Getty
Tamil

கீரை ஜூஸ்

இந்த ஜூஸ் முழுமையான ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கும். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் முதுமையை தடுத்து சருமத்தை பளபளப்பாக வைக்கும்.

Image credits: Social media
Tamil

ஆப்பிள் ஜூஸ்

இந்த ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் நன்மை பயக்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, பி இறந்த சரும செல்களை புத்துயிர் பெற செய்து சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது.

Image credits: Getty
Tamil

கற்றாழை ஜூஸ்

இது சருமத்திற்கு அதிக ஈரப்பதத்தை வழங்கி சருமத்தில் ஏற்படும் வீக்கம் வலியை குறைக்க உதவுகிறது. இதுதவிர சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும்.

Image credits: freepik
Tamil

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றவும், எண்ணெய் பசையை குறைக்கவும் உதவுகிறது  இது தவிர சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு ஜூஸ்

இதில் இருக்கும் வைட்டமின் சி தோல் நெகிழ்ச்சிக்காக கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்களது சருமத்தை உள்ளிருந்து பளபளக்க செய்கிறது.

Image credits: Getty
Tamil

பப்பாளி ஜூஸ்

பப்பாளி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சருமத்திற்கும் நன்மை பயக்கும். இந்த ஜூஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்க உதவுகிறது.

Image credits: Getty
Tamil

வோக்கோசு ஜூஸ்

இந்த ஜூஸில் வைட்டமின் சி மற்றும் கே வளமாக உள்ளதால் சருமத்திற்கு போதுமான கொலாஜனை உருவாக்குகிறது. இது முகப்பரு பிரச்சனைகளை குறைத்து சருமத்தை பளபளப்பாக வைக்கும்.

Image credits: Social media
Tamil

நெல்லிக்காய் ஜூஸ்

வைட்டமின் சி-யின் சிறந்த ஆதாரமாகும். இது ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது. இது தவிர இது வயதாவது தாமதப்படுத்துகிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது.

Image credits: Getty

சென்னையை சுற்றி மறைந்துள்ள சுற்றுலா தலங்கள்!

குளிர்காலத்தில் ஆரோக்கியமான கொலஸ்ட்ராலுக்கு தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

40 வயது பெண்கள்! எலும்பு வலிமைக்காக சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ!

தலைமுடி, சருமத்திற்கு அரிசி தண்ணீர் செய்யும் நன்மைகள்!