வாழைப்பழங்கள் பெரும்பாலும் பாலுடன் ஸ்மூத்திகளில் சேர்க்கப்படுகின்றன, ஆனால் ஆயுர்வேதத்தின் படி, இது உடலில் நச்சுப் பொருட்களை உருவாக்கி செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. இவற்றை பாலுடன் சேர்த்தால் செரிமானமின்மை மற்றும் வீக்கம் ஏற்படலாம்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி ஷேக் அனைவருக்கும் பிடித்த பானம். ஆனால் ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் கலப்பது ஸ்ட்ராபெர்ரியின் அமிலத்தன்மை காரணமாக செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது, இது பால் திரிந்து போக வழிவகுக்கும், இதனால் குமட்டல், வீக்கம், தலைவலி ஏற்படலாம்.
புளிப்பு பெர்ரி
ராஸ்பெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பெர்ரி பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. பால் திரிந்து போக வழிவகுக்கும். இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
முலாம்பழம்
முலாம்பழத்தை தனியாக சாப்பிடுவது சிறந்தது. இதனுடன் பால் சேர்த்து குடித்தால் வயிற்று பிரச்சினைகளை அதிகரிக்கும்.
மாம்பழம்
மாம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது செரிமானத்தை பாதிக்கும். வயிற்றில் வாயுவை ஏற்படுத்தும். பொதுவாக இந்த தவறை பெரும்பாலும் செய்கின்றனர்.