life-style

சாம்பார்:

மீன் குழம்புக்கு அடுத்தபடியாக அதிக சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு உணவு தான் இந்த சாம்பார். இது எப்படி ஆன்ட்டி கேன்சர் புராபர்ட்டியாக நம் உடலில் செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.

Image credits: freepik

சாம்பார் VS கேன்சர்

சாம்பார் ரெகுலராக சாப்பிடும் நபருக்கும், சாம்பார் சாப்பிடாதவருக்கும், கேன்சர் பாதிப்பை நாம் ஒப்பிட்டு பார்த்தால், சாம்பார் சாப்பிடுபவருக்கு பாதிப்பு குறைவா என்றால் இல்லை.

Image credits: social media

ஆன்ட்டி கேன்சர்:

ஆனால் சாம்பரில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் ஆன்ட்டி கேன்சர் புராபர்டீசாக செயல்படும் தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

Image credits: Pinterest

மஞ்சள்:

மஞ்சள் ஒரு இயற்க்கை ஆட்டிபயாட்டிக் என கூறலாம். இதில் உள்ள குர்குமின் என்கிற மூலக்கூறுக்கு கேன்சரை எதிர்த்து போராடும் தன்மை உள்ளதாக சில ஆய்வுகளில் கூறி உள்ளனர்.
 

Image credits: Pixabay

சீரகம் - மிளகு

சீரகத்தில், தைமோல் என்கிற மூலக்கூறு உள்ளது. மிளகில் பிப்பரின் என்கிற மூலக்கூறு உள்ளது. இவை இரண்டிலும் சைட்டோ டாக்சின் உள்ளது. இது கேன்சருக்கு எதிரானது.

Image credits: Getty

பூண்டு:

இதைத்தொடர்ந்து சாம்பாரில் நாம் பயன்படுத்தும் பூண்டு, இதில் ஆலிசின் மற்றும் சல்பர் காம்போனென்ட் அதிகமாக உள்ளது. இதுவும் கேன்சருக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.

Image credits: Getty

பருப்பு காய்கறிகள்:

அதே போல் சாம்பாரில் நாம் பயன்படுத்தும் பருப்பு, காய்கறிகள் போன்றவற்றில் ஃபைபர் அதிகமாக உள்ளது. இதற்கும் ஆன்டி கேன்சர் பிராப்பர்டீஸ் இருக்கலாம்.

Image credits: social media

புளிக்கரைசல்:

சாம்பாரில் சிறிது புளி தண்ணீர் ஊற்றுகிறோம். இதில் அதிக அளவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது பிரஸ்ட் கேன்சர் செல்களை அழிக்குமா? என முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Image credits: google

போராடும் தன்மை:

சாம்பாருக்கு நேரடியாக கேன்சரை அழிக்கும் சக்தி இல்லை என்றாலும், இதில் இருக்கிற பொருட்கள் கேன்சருக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது என கூறுகிறார்கள்.

Image credits: Getty
Find Next One