மார்பகங்கள் அளவு பெரும்பாலும் பரபரப்பான விவாதப் பொருளாகவே இருக்கிறது. அவற்றில் ஒன்று தான் திருமணத்திற்கு பிறகு மார்பகங்கள் அளவு அதிகரிக்கிறது என்பது.
திருமணத்திற்கு பிறகு மார்பகங்கள் அளவு அதிகரிக்கும் என்று சொல்லுவது தவறு. ஆனால் பல நூற்றாண்டுகளாகவே இந்த கட்டுக்கதைகள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றன.
மார்பக அளவு அதிகரிப்பதற்கு கர்ப்பம், தாய்ப்பால், எடை அதிகரிப்பு, மாதவிடாய் போன்ற பல காரணங்கள் உள்ளன.
நீர்த்தேக்கம், ரத்த அளவு அதிகரிப்பதற்கு காரணமான ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பகாலத்தில் மார்பக அளவு பெரிதாகும். கூடுதலாக, தாய்ப்பாலுக்கு உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.
மாதவிடாய் தொடர்பான ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் மார்பக வீக்கம், மென்மையை ஏற்படுத்தும், ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பால் மார்பக நாளங்களில் அளவை அதிகரிக்க செய்யும்.
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக அளவானது மேலும் அதிகரிக்கும். மேலும் மார்பகங்களில் பால் நிரப்பும் போதும், காலியாகும் போதும் அளவு மாறும்.
மார்பகங்கள் கொழுப்பால் ஆனது என்பதால், எடை அதிகரிக்கும் போது மார்பகங்கள் பெரிதாகும்.
சில மருந்துகளின் காரணமாக கூட மார்பகங்கள் அளவு அதிகரிக்கும். உதாரணமாக ஈஸ்ட்ரோஜன் , மாற்று சிகிச்சை, பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் அடங்கும்.
மேலே சொன்னதை தவிர, மார்பகங்களில் இருக்கும் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து திசுக்கள் காரணமாகவும் மார்பகத்தின் அளவு அதிகரிக்கும்.