சில நேரங்களில் உங்களது டீனேஜ் குழந்தை கெட்ட பழக்கங்களை வளர்த்துக் கொள்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் அவர்களை திட்டுவதற்கு பதிலாக நல்வழிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகள் வளர வளர சில விஷயங்களை ரகசியமாக விரும்புவார்கள். எனவே அதுகுறித்து அவர்களிடம் ஒருபோதும் கோபப்படாதீர்கள்..
குழந்தைகள் வளரும் போது நீங்கள் அவர்களை மதிக்கவில்லை என்றால், அவர்கள் உங்களை குறைவாக மதிப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் உறவில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.
குழந்தை வளரும் காலத்தில் அவர்கள் உங்களிடம் பொறுமை இழந்து அல்லது மோசமாக நடந்து கொள்ளலாம். எனவே நீங்கள் கோபப்படாமல் பொறுமையாக இருப்பது ரொம்பவே முக்கியம்.
குழந்தையின் பொழுதுபோக்குகளில் நீங்கள் ஆர்வமாக இல்லையென்றால் அவர்கள் வருத்தப்படலாம். எனவே அவர்களது ஆர்வங்களில் ஆதரவாக இருங்கள்.
இந்த பருவத்தில் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகபும் கடினமாக இருக்கும். எனவே பெற்றோராகிய நீங்கள் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
குழந்தையிடம் கத்துவது, மோசமான மொழியை பயன்படுத்துவது உறவில் விரிசலை ஏற்படுத்து. மேலும் மோசமான நடத்தையை வெளிக்காட்டும். எனவே குழந்தையிடம் ஒருபோதும் கத்தாதீர்கள்.
குழந்தை உங்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் அவர்களுடன் பேசுங்கள்