life-style

யானைகள் எவ்வளவு நேரம் தூங்கும்!!

யானைகள் எவ்வளவு நேரம் தூங்குகின்றன. 22 மாத கர்ப்பத்திற்குப் பின்னர் குட்டி ஈனுவது என அவற்றைப் பற்றி 10 உண்மைகள் தெரிந்து கொள்ளலாம். 

Image credits: Getty

யானையின் தும்பிக்கை

யானையின் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை. இதில் 150,000 க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன, யானை தும்பிக்கையால் அரிசி மூட்டைகளையும் எளிதில் தூக்கும். 

யானையின் தூக்கம்

யானைக்கு 2 முதல் 3 மணி நேர தூக்கம் போதுமானது. எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும். சிறிய தூக்கத்தில் தனது சோர்வை போக்கிக் கொள்கிறது.

யானை கர்ப்ப காலம்

பெண் யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள். இது வேறு எந்த விலங்குகளின் கர்ப்ப காலத்தை விட மிக நீண்டது.

நீரின் வாசனையை அறியும் சக்தி

யானைகள் 4.5 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட நீரின் வாசனையை மோப்பம் பிடிக்கும். கோடையில் தண்ணீரைத் தேடி மனித குடியிருப்புகளுக்குள் நுழைந்து விடுகின்றன.

காதுகளால் வெப்பநிலையை கட்டுப்படுத்தும்

யானைகளின் காதுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆப்பிரிக்க யானைகளின் காதுகள் மிகப்பெரியவை, இதன் மூலம் அவை உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன.

இறந்த உறுப்பினரை நினைவில் வைத்திருக்கும்

மனிதர்களைப் போலவே யானைகளும் சமூக விலங்குகள். குட்டிகளின் மீது பாசமாக இருக்கும். கூட்டத்தில் ஒன்று இறந்துவிட்டாலும் கூட்டமாக சேர்ந்து கர்ஜித்து துக்கம் அனுசரிக்கும் 

சிறந்த நீச்சல் வீரர்கள்

யானையால் சோர்வடையாமல் இடைவிடாமல் நீண்ட தூரம் நீந்த முடியும், அவை தங்கள் தும்பிக்கையை தண்ணீருக்கு வெளியே வைத்திருக்கும், இதன் மூலம் அவை எளிதாக சுவாசிக்க முடியும்.

யானைகளின் கைப்பழக்கம்

யானைகளும் வலது மற்றும் இடது கைப் பழக்கம் கொண்டவை, அவை தங்கள் தும்பிக்கையை பயன்படுத்துவதில் 'வலது' அல்லது 'இடது' கை பழக்கம் கொண்டவை.

யானைகளால் குதிக்க முடியுமா?

யானைகளால் குதிக்கவோ அல்லது துள்ளிக் குதிக்கவோ முடியாது. அவற்றால் ஒரே நேரத்தில்  நான்கு கால்களையும் தூக்க முடியாது.

யானைகளின் புத்திசாலித்தனம்

விலங்குகளில் யானையின் மூளை மிகப்பெரியதுடன், வளர்ச்சியடைந்தததாகும். புத்திசாலி மிருகம். நீண்ட காலமாக எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். மேலும் அவை உணர்ச்சிவசப்படக்கூடியவை.

Find Next One