life-style

போலி துவரம் பருப்பை எப்படி கண்டறிவது!!

தற்போது எந்தப் பொருள் எடுத்தாலும் அதில் போலி பொருள் வந்துவிட்டது. அடையாளம் காண்பது கொஞ்சம் கடினம் தான். துவரம் பருப்பு எப்படி காண்பது என்று பார்க்கலாம்.

Image credits: social media

துவரம் பருப்பு

பொதுவாக வீடுகளில் அதிகம் துவரம் பருப்பு பயன்படுத்தி சாம்பார் செய்வார்கள். அப்படிப்பட்ட துவரம் பருப்பை நீங்கள் எப்படி வாங்குவது என்று தெரிந்து கொள்வோம்-

துவரம் பருப்பு வகைகள்

நாட்டுத் துவரம் பருப்பு சிறியதாக, வெளிர் மஞ்சள் நிறமாகவும், கலப்பினத் துவரம் பருப்பு  ஊட்டச்சத்து குறைந்ததாக சற்று பெரியதாகவும் இருக்கும். 

தரத்தில் கவனம் தேவை

சந்தையில் குறைந்த விலையில் போலி துவரம் பருப்பு விற்பனை செய்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தரத்தில் கவனம் செலுத்தி, சுத்தமான, நடுத்தர அளவிலான துவரம் பருப்பை வாங்கவும்.

பாலிஷ் செய்யப்படாத பருப்பு

சந்தையில் பாலிஷ் செய்யப்பட்ட, பாலிஷ் செய்யப்படாத பருப்பு கிடைக்கிறது. இதில் பாலிஷ் செய்யப்படாத பருப்பு ஆர்கானிக். பளபளப்பாக இருக்காது. பாலிஷ் செய்யப்படாத பருப்பை வாங்கவும்.

துவரம் பருப்பு நிறம்

துவரம் பருப்பை அடையாளம் காண லேசாக நசுக்கி, 5 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மஞ்சள் நிறம் பிரிந்து வந்தால், அதில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். 

ஹைட்ரோகுளோரிக் அமிலம்

தண்ணீர் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் இரண்டு சொட்டு கலந்து 1 டீஸ்பூன் துவரம் பருப்பை அதில் போடவும். பருப்பின் நிறம் மாறினால், அதில் கலப்படம் இருக்கலாம்.

தொட்டுப் பாருங்கள்

துவரம் பருப்பை வாங்கும்போது உள்ளங்கையில் வைத்து நசுக்க வேண்டும்.அதிலிருந்து தூள்  வந்தால் அது பழைய அல்லது கெட்டுப்போன பருப்பு என்று அர்த்தம். 

Find Next One