Fashion

தொப்பை இருந்தாலும் லெஹங்கா உடுத்தலாம் வாங்க

சிலருக்கு வகை வகையா ஆடை உடுத்துவதற்கு ஆசை இருக்கும். ஆனா, குண்டாக இருக்கிறோமே, தொப்பை தெரியுதே என்ற கவலையும் இருக்கும். என்ன செய்யலாம்?

லெஹங்கா ஸ்டைல் குறிப்புகள்

தீபாவளி பண்டிகைக்கு லெஹங்கா அணிய ஆசை. தொப்பை இருக்கா? உங்கள் தொப்பையை மறைத்து, ஸ்டைலான தோற்றத்தைத் தரும். லெஹங்கா ஸ்டைல் குறிப்புகளை இங்கேபார்க்கலாம். 

குர்தி ஸ்டைல் லெஹங்கா

லெஹங்கா வெறும் சோலியுடன் மட்டுமே அணியப்படுவதில்லை. அவற்றை குர்தியுடனும் அணியலாம். இதில் கான்ட்ராஸ்ட் வண்ணக் கலவையை தேர்வு செய்தால் குர்தி தொப்பையை மறைக்க உதவும்.

ஃபுல் ஜாக்கெட் ஸ்டைல் லெஹங்கா

லெஹங்கா மற்றும் சோலி உடன் ஃபுல் ஜாக்கெட் அணியலாம். ஃப்ரண்ட் ஓபன் ஸ்டைல் ஜாக்கெட் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் தொப்பையை மறைக்க உதவும்.

அனார்கலி ஸ்டைல் லெஹங்கா

அனார்கலி ஸ்டைல் லெஹங்காவை அணியலாம். குளிர்காலத்தில் இந்த வகையான உடை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஸ்டைலாக இருப்பதுடன், குளிரில் இருந்தும் பாதுகாக்கும்.

பெப்லம் ஸ்டைல் லெஹங்கா

ஸ்டைலான பெப்லம் போன்று வித்தியாசமான டிரஸ் எடுக்கவும். எந்த விருந்துக்குச் சென்றாலும் அங்கு நீங்கள் மிகவும் நவநாகரீகமாக தெரிவீர்கள்.

ஹெவி துப்பட்டா லெஹங்கா

லெஹங்காவுடன் ஹெவி துப்பட்டா எடுத்து தொப்பை முழுவதுமாக மறைக்கலாம். இது உங்களுக்கு ஸ்டைலுடன் கூடிய முழுமையான சவுகரியத்தை தரும்.

ஹாஃப் நெட் சோலி லெஹங்கா

ஜாக்கெட் லெஹங்கா சோலி டிரெண்டில் உள்ளது. உங்களுக்காக இதுபோன்ற லெஹங்காவை தைக்கலாம் அல்லது வாங்கலாம். இதில் சோலியுடன் நீங்கள் குண்டாகவும் தெரிய மாட்டீர்கள்.

வேலைக்கு செல்லும் பெண்ணா நீங்க... உங்களுக்கான 7 ஸ்டைலிஷ் வாட்ச் இதோ

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 7 ஸ்டைலிஷ் வாட்ச்கள்!

நவராத்திரி ஸ்பெஷல்.. பட்டுப்புடவையில் மின்னும் ஜான்வி கபூர்!

காஞ்சிபுரம் பட்டு சேலையில் இத்தனை அம்சங்களா?