துருப்பிடித்த இடத்தில் உப்பை கொண்டு தேய்த்தால் துரு சுலபமாக நீங்கிவிடும்.
வெங்காயம், பூண்டு நறுக்கிய பிறகு கைகளில் அதன் வாசனை அடிக்கும். எனவே கைகளை உப்பு நீரில் கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.
கிச்சன் சிங்கிள் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகள் மற்றும் துர்நாற்றங்களை நீக்க உப்பை தூவி, சூடான நீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டை துடைக்கும் தண்ணீரில் உப்பு கலந்து துடைத்தால் கண்ணுக்கு தெரியாத தூசி, அழுக்கு, பாக்டீரியாக்கள் நீங்கிவிடும்.
பாத்திரங்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறையை சுலபமாக சுத்தம் செய்ய உப்பை அதில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து பிறகு சுத்தம் செய்யவும்
பாத்ரூம் சுவர் மற்றும் தரையில் படிந்திருக்கும் விடாப்பிடியான மஞ்சள் கறைகளை நீக்க உப்பை பயன்படுத்தலாம்.
சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது? அதன் ஆரோக்கிய நன்மைகள்!!
இந்த வகையான நண்பர்களை ஒதுக்குங்க.. சாணக்கியர் அறிவுரை
ஒரு நிமிடத்தில் மிக்ஸியை ஈஸியா சுத்தம் செய்ய டிப்ஸ்!
சைவ உணவில் கிடைக்கும் விட்டமின் பி12 - எதில் இருக்கு தெரியுமா?