life-style
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியை இடித்து போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை தானாக குறைய ஆரம்பிக்கும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் இஞ்சி டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இஞ்சி சாறுடன் சிறிதளவு தேன் மற்றும் தண்ணீர் கலந்து ஜூஸாக செய்து குடித்தால் உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
உடல் எடையை குறைப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிப்பதால் இதனுடன் இஞ்சியும் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
இஞ்சி சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு குடித்து வந்தால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும். இதனால் உடல் எடையும் குறையும்.
இதனுடன் நீங்கள் வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக எந்தவொரு முயற்சி செய்வதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.