life-style
சூரியகாந்தி போன்ற ஆரோக்கியமான எண்ணெயை பயன்படுத்துங்கள். ஏனெனில் இவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
உங்களது உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்கவும். அவற்றில் கலோரிகள் குறைவாகவும், ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்தும் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைக்கும்.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கொழுப்பு நிறைந்த மீன்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
மஞ்சள், பூண்டு, இஞ்சி போன்ற கொழுப்பை குறைக்கும் மசாலா பொருட்களை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கொழுப்பை குறைக்க சோயா பொருட்கள் உதவும். எனவே நீங்கள் சோயாவை பால் அல்லது வேறு ஏதேனும் வடிவில் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
குயினோவா, சம்பா அரிசி பிற தானியங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
கோழி, மீன், பருப்பு வகைகள் போன்ற ஒல்லியான புரதங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
புகை பிடித்தல் மது அருந்துதல் போன்றவற்றில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில் இந்த பழக்கம் உங்களது இதயத்தை பாதிக்கும்.