எள்ளில் ஆரோக்கியமான குறிப்புகள் நிறைந்துள்ளன. எனவே குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் உடலை வெப்பமாக வைத்துக் கொள்ளும்.
Image credits: Social Media
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
எள்ளில் துத்தநாகம் உள்ளதால் இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். எனவே, குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
Image credits: Social Media
Tamil
செரிமானத்தை மேம்படுத்தும்
எள்ளில் இருக்கும் நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
சருமத்தை மேம்படுத்தும்
எள்ளில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் குளிர் காலத்தில் சருமம் வறண்டு போவது தடுக்கப்படுகிறது.
Image credits: Social Media
Tamil
எலும்பை பலப்படுத்தும்
எள்ளில் கால்சியம், மெக்னீசியம் நிறைந்துள்ளதால் இவை எலும்புகளை பலப்படுத்தும். எனவே குளிர்காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது.
Image credits: social media
Tamil
ஆற்றல் அதிகரிக்கும்
எள்ளில் இரும்பு, வைட்டமின்கள் உள்ளன அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. குளிர்காலத்தில் எள் சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பீர்கள்.