life-style

ஈக்கள் மற்றும் கொசுக்களை விரட்ட

சிட்ரோனெல்லா எண்ணெய் தரை துடைப்பான்

சிட்ரோனெல்லா எண்ணெய், தண்ணீர், வினிகர் ஆகிய மூன்றையும் சேர்த்து ஃப்ளோர் கிளீனர் தயாரிக்கவும். இது வீட்டிலிருந்து பூச்சிகளை விரட்ட உதவும்.

லாவெண்டர் எண்ணெய் தரை துடைப்பான்

லாவெண்டர் எண்ணெயை தண்ணீரில் கலந்து துடைக்கவும். இது வீட்டில் நறுமணத்தை ஏற்படுத்துவதோடு பூச்சிகளை விரட்டவும் உதவும்.

வேப்பிலை மற்றும் துளசி தரை துடைப்பான்

இயற்கையான கிருமிநாசினி பண்புகள் கொண்ட வேப்பிலை மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் பாட்டிலில் சேமித்து தேவையானபோது பயன்படுத்தவும்.

எலுமிச்சை மற்றும் வினிகர் தரை துடைப்பான்

எலுமிச்சை சாறு, வினிகர், தண்ணீர் சேர்த்து வீட்டில் துடைக்கவும். இது தரையை சுத்தமாக வைத்திருப்பதோடு ஈக்கள் மற்றும் கொசுக்களை விரட்டவும் உதவும்.

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் தரை துடைப்பான்

பேக்கிங் சோடா, வினிகரை தண்ணீரில் கலந்து தரையை சுத்தம் செய்யவும். இது தரையை நன்றாக சுத்தம் செய்து ஈக்கள் மற்றும் கொசுக்களை விரட்டும்.

வெங்காயத்தோலின் நன்மை பத்தி தெரிஞ்சா இனி அதை தூக்கிப் போட மாட்டீங்க!

LPG Cylinder -ஐ இப்படி யூஸ் பண்ணா அதிக நாள் வரும்!

மழைக்காலத்தில் மசாலாப் பொருட்களில் பூச்சியா? பாதுகாக்கும் வழிமுறைகள்!

வீட்டிலோ அலுவலகத்திலோ மூங்கில் செடி வளர்ப்பதால் என்ன நன்மை தெரியுமா?