வாழைப்பழம் சீக்கிரம் கருக்காம இருக்க இந்த டிஷ்யூ பேப்பர் டிரிக் போதும்
life-style Sep 03 2026
Author: Velmurugan s Image Credits:Instagram
Tamil
தேவை ஒரே ஒரு டிஷ்யூ பேப்பர்!
வாழைப்பழத்தை ஃப்ரெஷ்ஷாக வைக்க எந்த கெமிக்கலோ, விலை உயர்ந்த பொருளோ தேவையில்லை. ஒரு டிஷ்யூ பேப்பரும், கொஞ்சம் தண்ணீரும் இருந்தா போதும்.
Image credits: Instagram
Tamil
தண்ணீரில் நனைக்கவும்
முதலில் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்துக்கோங்க. அதை தண்ணீரில் நனைத்து, லேசாக பிழிங்க (டிஷ்யூ கிழியாமல் பார்த்துக்கோங்க).
Image credits: Instagram
Tamil
காம்புப் பகுதியில் சுற்றவும்
ஈரமான இந்த டிஷ்யூ பேப்பரை, வாழைப்பழ சீப்பின் காம்புப் பகுதியில் நன்றாக சுற்றி விடுங்கள்.
Image credits: Instagram
Tamil
இது எப்படி வேலை செய்கிறது?
வாழைப்பழத்தின் காம்பிலிருந்து 'எத்திலீன்' என்ற வாயு வெளியாகிறது. இதுதான் பழம் சீக்கிரம் பழுக்கக் காரணம். காம்பை ஈரமான டிஷ்யூவால் மூடும்போது, இந்த செயல்முறை மெதுவாகிறது.
Image credits: Instagram
Tamil
3-4 நாட்கள் கூடுதலாக ஃப்ரெஷ்!
இப்படி செய்வதால், வாழைப்பழம் கருப்பதும், அழுகுவதும் தடுக்கப்படும். உங்கள் வாழைப்பழம் வழக்கத்தை விட 3-4 நாட்கள் கூடுதலாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
Image credits: Instagram
Tamil
இன்றே டிரை பண்ணுங்க!
இனிமேல் வாழைப்பழம் அழுகிப் போகுதே என்ற தலைவலி வேண்டாம். இன்றே இந்த ஈஸி டிரிக்கை முயற்சி செய்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்துங்கள்!