சமீப காலமாக பிளாக் காஃபி குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல, உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தரும்.
life-style Sep 02 2026
Author: Raghupati R Image Credits:Getty
Tamil
சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள்
இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் சுபம் வத்ஸ் கருத்துப்படி, பிளாக் காஃபியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கல்லீரல் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றது.
Image credits: Getty
Tamil
கொழுப்பு கல்லீரலைத் தடுக்க உதவும்
பிளாக் காஃபி, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இதனால் ‘நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர்’ நோயின் அபாயம் கணிசமாகக் குறைகிறது.
Image credits: Getty
Tamil
சிர்ரோசிஸ் ஆபத்துக்குத் தடை
பிளாக் காஃபியில் உள்ள கூறுகள், கல்லீரலில் தழும்பு திசு உருவாவதை மெதுவாக்குகின்றன. இது கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் சிர்ரோசிஸ் ஆபத்தைத் தடுக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
கல்லீரல் என்சைம்களை சமநிலைப்படுத்தும்
ALT மற்றும் AST போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கல்லீரல் என்சைம்களின் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்த, அளவான பிளாக் காஃபி நுகர்வு உதவுகிறது.
Image credits: Getty
Tamil
தினமும் எவ்வளவு குடிக்க வேண்டும்?
கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் பிளாக் காஃபி குடிப்பது சரியான அளவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image credits: Getty
Tamil
குடிக்க சரியான நேரம் எது?
காலையில் வெறும் வயிற்றில் பிளாக் காஃபி குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்றத்திற்கும் அதிக நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
Image credits: Getty
Tamil
முன்னெச்சரிக்கை
இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சர்க்கரை அல்லது பால் இல்லாமல் குடித்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும்.