வெண்டைக்காய் செடி வளர நல்ல வெயிலும், மிதமான வெப்பமும் தேவை. பிப்ரவரி முதல் மார்ச் மாதத்திற்குள் விதைக்கலாம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமும் விதைப்பதற்கு ஏற்றது.
அதிகமான குளிரில் வெண்டை விதைகள் முளைப்பது கடினம். அதனால் சரியான பருவத்தில் விதைப்பது முக்கியம்.
குறைந்தது 12 இன்ச் ஆழமும் அகலமும் உள்ள தொட்டி அல்லது 'க்ரோ பேக்' பயன்படுத்துங்க. தொட்டியின் அடியில் தண்ணீர் வடிய துளை இருக்க வேண்டும்.
மண்ணுடன் சிறிதளவு மாட்டுச் சாணம் அல்லது மண்புழு உரத்தைக் கலக்குங்கள். மண் நல்ல வளமானதாக இருக்க வேண்டும்.
மண்ணில் சுமார் 1 முதல் 1.5 இன்ச் ஆழத்தில் விதையை ஊன்றவும். இரண்டு செடிகளுக்கு இடையில் குறைந்தது 6 முதல் 8 இன்ச் இடைவெளி இருக்கட்டும்.
விதைத்த பிறகு, லேசாக தண்ணீர் தெளிக்கவும். 5 முதல் 8 நாட்களில் விதைகள் முளைக்கத் தொடங்கும். செடிக்கு தினமும் குறைந்தது 5 முதல் 8 மணி நேரம் நேரடி சூரிய ஒளி தேவை.
மண்ணில் ஈரம் இருக்க வேண்டும், ஆனால் தண்ணீர் தேங்க விடாதீர்கள். செடியில் பூச்சித் தாக்குதல் தெரிந்தால், வேப்பெண்ணெயை தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
விதைத்த 40-50 நாட்களில் செடி காய்க்கத் தொடங்கும். வெண்டைக்காய் 3 முதல் 4 இன்ச் நீளம் வளர்ந்ததும், உடனடியாகப் பறித்துவிட வேண்டும். அவ்வாறு செய்தால் செடியில் புதிய காய்கள் வளரும்.
ஆரம்பத்தில் மண்ணில் சரியாக உரம் போட்டிருந்தால், செடி வளரும்போது அடிக்கடி உரம் போடத் தேவையில்லை. சூரிய ஒளி மற்றும் தண்ணீர் மீது கவனம் வைத்தால் மட்டுமே போதும்!