வாஷிங் மெஷினை சுத்தம் செய்யாமல் இருப்பது, சூடான நீரைப் பயன்படுத்துவது, அதிக துணிகளைப் போடுவது, மற்றும் அதிக சோப்பு பயன்படுத்துவது போன்ற பொதுவான தவறுகள் ஆடைகளை சேதப்படுத்தும்.
life-style Apr 02 2026
Author: vinoth kumar Image Credits:freepik
Tamil
ஜிப் போட மறக்காதீர்கள்
வாஷிங்மெஷினில் ஜீன்ஸ் மற்றும் பிற ஆடைகளை துவைப்பதற்கு முன் அவற்றின் ஜிப் மூடுங்கள். இல்லையெனில் அவை சேதமடையும்.
Image credits: freepik
Tamil
வாஷிங் மெஷினை கழுவாமல் இருப்பது
வாஷிங் மெஷினை சுத்தம் செய்யாமல் இருந்தால் அழுக்கு மற்றும் தேய்மானம் ஏற்படும். எனவே மாதத்துக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சுத்தம் செய்யுங்கள்.
Image credits: Getty
Tamil
சூடான நீரை பயன்படுத்தாதே
சூடான நீர் ஆடைகளின் நிறத்தை மங்க செய்யும் மற்றும் சுருங்கும். எனவே துணிகளை துவைப்பதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள். அது துணிகளை மென்மையாக வைக்கும்.
Image credits: social media
Tamil
ஒன்றாக துவைக்காதே
துணிகளை நிறத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள். ஏனெனில் ஒன்றாக துவைத்தால் அழுக்கு படியும் மங்கி விடும்.
Image credits: freepik
Tamil
அதிகமாக சோப்பு பயன்படுத்தாதே
வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் போது அதிகமாக சோப்பு பயன்படுத்தக் கூடாது. அது துணிகளில் படிந்து விடும். இது சிலருக்கு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.
Image credits: Freepik
Tamil
அதிகமாக போடாதே
இயந்திரத்தில் அதிக துணிகளை போட்டால் ஒழுங்காக சுத்தம் செய்யாது. அதுமட்டுமின்றி ஆடைகளுக்கு இடையே அதிகப்படியான உராய்வு ஏற்பட்டு சீக்கிரமே துணிகள் கிழிந்துவிடும்.
Image credits: Freepik
Tamil
லேபிள்களை படிக்காமல் இருக்காதே
ஒவ்வொரு ஆடையிலும் துணியை பற்றிய தகவல் இருக்கும். அதை படித்து ஆடைகளை துவைக்கவும்.